Sunday, April 29, 2012






ஓயாப் பெருங்குரல்


கடந்து போகும்
காலவெளியினில்
கால்பட்டு இடறுகின்றன
மனித எலும்புகள்


வர்க்க பேதங்கள்
மறைந்து போய்
வர்ணாசிரமம்
தொலைந்து போய்
எலும்புகளே மீதமாய்
சிதறிக்கிடக்கிறது வாழ்க்கை


உன்முகம், என்முகம்
என்பதெல்லாம் சிதைந்து
புழுதிபடிந்ததொரு
நன்னாளில்
உயிர்த்தெழுகிறது
உள்மனத்திலிருந்து
ஓங்கியொலிக்கும்
காலவெளியின்
ஓயாப் பெருங்குரல்.


ஏகலைவன்
உதவிக்கரம் இதழில் வெளிவரும் வித்தியாசமாய் சில விமர்சனங்களின் பகுதி -4