Friday, January 31, 2014

எழுத்துச் செல்வருக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

தங்களின் பேராதரவோடு வெற்றி மகுடம் சூட வழிகாட்டும் நம்பிக்கை வாசல் இதழ்


பிப்ரவரி - 2014

எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன் மணிவிழா சிறப்பிதழ்






ஆண்டுக் கட்டணம் - ரூ. 150
ஐந்தாண்டுக் கட்டணம் - ரூ. 750

ஆயுள் சந்தா - ரூ. 2000
புரவலர் நன்கொடை - ரூ. 7,000

கவிஞர் ஏகலைவன்
ஆசிரியர் – நம்பிக்கை வாசல்
பதிப்பாசிரியர் -வாசகன் பதிப்பகம்
தலைவர் - நம்பிக்கை வாசல் அறக்கட்டளை

11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8682994697, 9842974697
kavignareagalaivan@gmail.com
 இப்படிக்குத் தோழன் - நூலாய்வு!


நூல் ஆசிரியர் - கவிஞர் ஏகலைவன் !

நூல் விமர்சனம்  -கவிஞர் இரா .இரவி ! 

வாசகன் பதிப்பகம் 11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு .சேலம் .636015.  செல் 8682994697

தனது பள்ளி , கல்லூரி தோழிகளை நினைவு கூர்ந்து வடித்த புதுக்கவிதை நூல் .கையடக்கப் பதிப்பாக வந்துள்ளது .நூல் ஆசிரியரே பதிப்பாளர் என்பதால் நினைத்தபடி மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளார் .புகைப்படங்கள் அட்டைப்பட வடிவமைப்பு  உள்அச்சு யாவும் மிக நன்று . சிறப்பாக வந்துள்ளது .பாராட்டுக்கள் . 

முகநூலில் ஆண் பெண் இருபாலரும் ஏன் ? முன்றாம் பாலான திரு நங்கைகளும் தோழமையோடு கருத்துக்களைப் பகிர்ந்து வரும் காலம் இது .முக நூலால் சில தீமைகள் வந்த போதும் ,பல நன்மைகள் உள்ளன என்பது உண்மை .நட்பின் மேன்மையை உணர்த்தும் நூல் . 

 
தன்னம்பிக்கை எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் அவர்களின் அணிந்துரையும் ,காந்தி கிராமியப் பல்கலைக் கழகத்தின் துறைத் தலைவர் முனைவர் அ .ஜாஹிதா பேகம் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக உள்ளன .

காகங்கள் ஒற்றுமையாக உள்ளன .மனிதர்களுக்கு ஒற்றுமை இல்லை என்றே பலரும் சொல்லி உள்ளனர் .நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் மாற்றி யோசித்து புதுக் கவிதை வடித்துள்ளார் .

ஒரே கடலை மிட்டாயை
காக்கா கடி கடித்து
புன்னகையோடு
பங்கிட்டுக் கொள்ளும்
நம்மைக் கண்டு
காக்கைகளும்
பெறுகின்றன
தோழமையுணர்வை ! 

 நூல் படிக்கும் வாசகர்களுக்கு குழந்தை காலத்து நினைவுகளை வரவழைத்து வெற்றி பெறுகிறார் .

தாய் தந்தையிடம் பகிர்ந்து கொள்ள முடியாததை தோழமையுடன் பகிர்ந்து கொள்ள முடியும் .நட்பிற்காக எதையும் விட்டுக் கொடுக்கும் மனம் வரும் .அதனை உணர்த்தும் கவிதை .
வெற்றியைத்
தொடப் போகும்
நிலையிலும்
விட்டுக் கொடுக்கும்
மனப்பாங்கை
உள்ளிருத்தி
ஒளிர்கிறது
தோழமை ! 

நல்ல தோழமை நம்பிக்கை தரும் .தன்னம்பிக்கை விதைக்கும். என்பதை உணர்த்தும் கவிதை .
எல்லாமே
வெறுத்துப் போய்
எதுவுமே
வேண்டாமென
உதறி நடக்கையிலும்
உடன் வந்து
ஒட்டிக் கொள்கிறது
நீ தந்த நம்பிக்கை !

75 வது என் அப்பாவை சில நாட்களாக காணவில்லை தேடாத இடமே இல்லை. மனம் நொந்து நொறுங்கி எழுத்தையே விட்டு விடுவோம் என்று எண்ணியபோது, தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்கள் உள்ளிட்ட நண்பர்கள பலர் தந்த ஆறுதலும், சிறந்த சிந்தனையாளர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் சொன்ன ஒரு வரியும் தான் என்னை திரும்ப இயங்க வைத்தது . " கஷ்டம் இல்லாதவங்க யாருமே இல்லை .உங்க கஷ்டத்திற்காக உடைந்து விடாதீர்கள் ." கவலையால் தொய்வுரும் அனைவருக்கும் இந்த வரி ஆறுதல் தரும் .தோழமைக்கு மிகப் பெரிய ஆற்றல் உண்டு என்பதை உணர்த்தும் உன்னத நூல் . 

கல்லூரி காலங்களில் தோழியோடு நட்பாகப் பழகுவதை நண்பர்கள்
சிலர் நட்புதான் என்றாலும் அதையும் தாண்டி ஏதோ உண்டு என்று கேலி பேசுவது உண்டு .அதற்கு விடை சொல்லும் கவிதை நன்று .

உனக்கு நான்தான்
பெண் பார்ப்பேன் என்கிற
உன் குறு செய்தியை
பார்த்த பின்புதான்
விளங்கிக் கொண்டான்
என் நண்பன்
நம் தோழமையை ! 

ஆண் பெண் பேதமின்றி வளர்ந்த , வளரும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் ,படைப்பாளிகளுடன் எனக்கு தூய நட்பு உண்டு .குறிப்பாக பெண்பாலில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழும் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர், பேராசிரியர் ,சிறந்த ஆய்வாளர் , நூல் விமர்சகர் திருமதி சு .சந்திரா அவர்கள் , சவூதி அரேபியா ,அமெரிக்கா,ஜப்பான் என்று விமானத்தில் பறந்து கொண்டே இருக்கும் எழுத்தாளர் ,கவிஞர் ,நூல் விமர்சகர் திருமதி விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் ,குஜராத் மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள நிலக்கோட்டை என்று பயணமாகி வரும் வளர்ந்து வரும் கவிஞர் திருமதி யாத்விகா அவர்கள் .இவர்கள் எல்லாம் எனக்கு குடும்ப நண்பர்கள். ஆரோக்கியமான இலக்கியத் தோழமைகளை நினைவு கொள்ள வைத்தது இந்த நூல் . 

நம்பிக்கை வாசல் மாத இதழ் ஆசிரியர் நூல் ஆசிரியர் , இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

 நன்றி -  கவிஞர் இரா. இரவி

 இவ்விமர்சனத்தை பிற தளங்களில் வாசிக்க...

 http://www.tamilthottam.in/t42643-topic#246635

http://eluthu.com/kavithai/175217.html
.
http://www.noolulagam.com/product/?pid=6802#comment-6279


http://www.eraeravi.com/home/detail.php?id=349&cat=nl