Thursday, June 27, 2013


நாமக்கல் மகிழ்ச்சி மன்ற விழாவில் சுவாமி ஆத்மானந்த குருஜி அவர்களால் கவிஞர் ஏகலைவன் அவர்கள் கெளரவிக்கப்படும்போது...

Saturday, June 15, 2013

இரண்டாமாண்டை நோக்கி வெற்றி நடைபோட்டு, இளைய மனங்களில் நம்பிக்கை விதைத்து சாதனை மகுடம் சூடி பவனி வரத் தூண்டும் இதழ்

ஜூன் இதழ்

 

ஆண்டுக் கட்டணம்   - ரூ. 120
ஐந்தாண்டுக் கட்டணம் - ரூ. 600
புரவலர் நன்கொடை   - ரூ. 5,000

கவிஞர் ஏகலைவன்
ஆசிரியர் நம்பிக்கை வாசல்
பதிப்பாசிரியர் -வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
kavignareagalaivan@gmail.com

Sunday, June 9, 2013


குறையொன்றுமில்லை ...

நூல் விமர்சனம் 
கவிஞர் இரா .இரவி .


நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன்
செல் 8428729494.kavignareagalaivan@gmail.com

வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர் ,
சன்னியாசிகுண்டு ,
சேலம் .636015.
விலை ரூபாய் 60.

நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் அவர்கள் தொடர் வண்டி விபத்தில் ஒரு காலை இழந்த போதும் தன்னபிக்கையை மட்டும் என்றும் இழக்காதவர் .மாற்றுத்திறனாளி என்பதையே மறந்து ஓய்வின்றி உழைக்கும் உழைப்பாளி .பல்வேறு விருதுகளும், பரிசுகளும் பெற்ற கவிஞர் ,எழுத்தாளர் .இந்த நூலிருக்கு கவிதைஉறவு இதழின் விருது கிடைத்துள்ளது .பாராட்டுக்கள் .

குறையொன்றுமில்லை நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் நம்பிக்கை வாசல் மாத இதழின் ஆசிரியர் தன் இதழில் எழுதிய கட்டுரைகளையும் , பிற இதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .தன்னம்பிக்கை விதைக்கும் 23 கட்டுரைகள் உள்ளன .

நல்ல கனவு காணுவோம் ,திட்டமிடுவோம் ,பயிற்சி ,முயற்சி ,உழைப்போம் ,வெற்றி பெறுவோம் .சாதனை நிகழ்த்துவோம் என்று சொல்லித்தரும் நூல் இது .

வாழ்க்கையில் விரக்தி ,சோகம் உள்ளவர்கள் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும் .உங்களுக்குள் மாற்றம் விளைவிக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம் .

.கட்டுரைகளுக்கு மிகப் பொருத்தமாக புகைப்படங்கள் ,வடிவமைப்பு ,அச்சு ,அட்டைப்படம் என யாவும் மிக நன்று .நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் .அவர்களே சொந்தமாக வாசகன் பதிப்பகம் தொடங்கி தனது நூல்களையும் பிறர் நூல்களையும் தரமாகப் பதிப்பித்து வருகிறார் .பாராட்டுக்கள் .

முல்லா அவர்கள் "எந்த கஷ்டமும் படாமல் லட்சாதிபதி ஆக வழி சொல்கிறேன் என்றதும் ,பெரும் கூட்டம் கூடி விடுகிறது .அவர்களிடம் முல்லா அவர்கள் சொன்னார் ."நாட்டில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொண்டேன் .என்றார் .

இதுபோன்ற சின்னச் சின்ன நிகழ்வுகள் ,கதைகள் பொன்மொழிகள் ,தன்னம்பிக்கை விதைகள் நூலில் ஏராளம் .

கல்வியின் மேன்மையை ,சிறப்பை பல கட்டுரைகளில் வடித்துள்ளார் .தடைகள் எல்லாம் தடைகளல்ல கட்டுரையில் தெனாலி ராமன் கதை உள்ளது .

" ஒரு சிக்கலை தடைக்கல்லாகப் பார்ப்பதும் படிக்கல்லாகப் பார்ப்பதும் நம்முடைய 
பார்வையின் கோணத்தில்தான் அமைந்துள்ளது .நேர்மறைப் பார்வை கொண்டவர்களுக்கு ஒரு சிக்கல் படிக்கல்லாகத தோற்றமளிக்கிறது .எதிர்மறைப் பார்வை கொண்டவர்களுக்கு ஒரு சிக்கல் தடைக்கல்லாகத் தோற்றம் தருகிறது ."

இதுபோன்ற பல பயனுள்ள கருத்துக்கள் நூலில் உள்ளன .இதை படிததும் என் நினைவிற்கு வந்தது ,
ரோஜாச்செடியைக் காட்டியபோது நேர்மறைப் பார்வை கொண்டவ்ன் ரோஜா உள்ளது .என்றான் . எதிர்மறைப் பார்வை கொண்டவன் முட்கள் உள்ளன என்றான்.

தண்ணீர் உள்ள ஜாடியைக் காண்பித்தபோது நேர்மறைப் பார்வை கொண்டவ்ன் ஜாடியில் தண்ணீர் உள்ளது என்றான் .எதிர்மறைப் பார்வை கொண்டவன் பாதி ஜாடியில் தண்ணீர் இல்லை என்றான் .

இந்த நூல் படிக்கும்வாசகனுக்குநேர்மறைசிந்தனையைக் கற்பிக்கும்விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் . 

உடற்குறைகள் தடையல்ல கட்டுரையில் கலைமாமணி எஸ் .ஆர் .கிருஷ்ண மூ ர்த்தி ,ஜப்பான் ஹிரடோடோ ஓட்டோக் , நிக்வஜிசிக் ஆகியோரின் புகைப்படங்களுடன் ,மாற்றுத் திறனாளிகளின் சாதனைகளை விளக்கி உள்ளார் .நிக்வஜிசிக் அவர்களின் திறமையை யூ டி யுபில் பார்த்து வியந்து இருக்கிறேன் .மேலே உள்ள மூன்று பேருக்கும் கைகள் இல்லை இடுப்புக்குக் கீழ் எதுவும் இல்லை .அவர்கள் சாதிக்கும்போது .கை கால் நன்றாக உள்ள நாம் ஏன் சாதிக்கக் கூடாது ? என்ற உந்து சக்தி விதைக்கும் விதமாக நூல் உள்ளது .

"கவிதை எழுதுபவன் கவிஞன் அல்ல. கவிதையாக வாழ்பவனே கவிஞன்." என்ற மகாகவி பாரதியின் கூற்றுப்படி நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் அவர்கள் எழுதுவதோடு நின்று விடாமல் எழுதியபடி வாழ்ந்து வருபவர் .குடத்து விளக்காக இருந்த பல 
மாற்றுத்திறனாளிகளை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்தவர் .இந்த நூலில் நூல் ஆசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது .பாராட்டுக்கள் .இந்த நூலிற்கு இன்னும் பல விருதுகள் வரும் .வாழ்த்துக்கள் .

நன்றி

கவிஞர். இரா. இரவி, மதுரை

Tuesday, June 4, 2013

உதவிக்கரம் இதழில் வெளிவரும் கவிஞர் ஏகலைவன் அவர்களின் "வித்தியாசமாய் சில விமர்சனங்கள்" பகுதி - 18